அடிக்கடி உண்டாகும் வயிற்று வலிக்கு தீர்வென்ன?

பொதுவாக நெஞ்சுக்கு கீழ் மற்றும் அடி வயிற்றுக்கு மேல், இடைப்பட்ட வயிறு பகுதியில் வரும் வலி அல்சராகத் தான் இருக்கும்.

இதற்கு காரணம் சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் எழுவதில்லை.

இதை தவிர்க்க பேக்கிங் செய்த உணவு வகைகளை சாப்பிடக்கூடாது.

துரித வகை உணவுகள், ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.

உடற்பயிற்சி மிகவும் நல்லது. குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும்.

மருந்து மாத்திரைகள் எடுத்தாலும், இந்த பழக்கங்களை பின்பற்றினால் அல்சரை குணப்படுத்த முடியும்.

கடைகளில் சுயமாக மருந்து மாத்திரை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.