ஹைப்பர் தைராய்டிசம் வந்தால் வரும் பாதிப்புகள் என்னென்ன?
தைராய்டு சுரப்பி அதிகப்படியான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும்போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது.
இது உடலின் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. அதனால் உடல் எடை குறைகிறது.
கை நடுக்கம், வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்பு, அதிகரித்த பசி, பதற்றம், கவலை மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புகள் வரும்.
மேலும் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், வெப்ப உணர்திறன் அதிகரித்தல், குடல் இயக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் அடிக்கடி மலம் கழித்தல் அகிய முக்கிய அறிகுறிகள் காணப்படும்.
மேலும் உடல் சோர்வு, தசை பலவீனம், துாக்கப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகளும் இருக்கும்.
முயற்சி செய்யாமல் உடல் எடை குறைந்தாலோ, அல்லது முறையற்ற இதயத்துடிப்பு இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.