குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக எந்த மாதிரி உணவு தரலாம்?

பொதுவாக உங்கள் குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்றாற்போல் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை தர வேண்டும்.

விரல்களால் அல்லது மத்தை கொண்டு உணவை மசித்து கொடுக்க வேண்டும்.

பல் இல்லாததால் குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே முழுங்குவதால் செரிமான கோளாறு ஏற்படும்.

முட்டை, மாமிச உணவுகளை உட்கொள்ளும்போது மசித்து கொடுக்க வேண்டும்.

கீரை கொடுக்கும் போது பருப்புடன் சேர்த்து மசித்து நெய் கலந்து கொடுக்க வேண்டும்.

பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, ஓமம், சோம்பு, சீரகம், மல்லி விதை, எள்ளு ஆகியன ஜீரணத்தை அதிகரிக்கக்கூடியன.

எனவே, சட்னி, சாம்பார், கூட்டு, அவியல் ஆகியவற்றுடன் இவற்றை சேர்த்து கொடுக்கலாம்.