குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கில் கூடுதல் கவனம் தேவை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் தரையில் கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை கொடுப்பதாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
நீர்ச்சத்து குறையாமல், தோல் வறட்சியாகாமல், குழந்தை சோர்ந்து விடாமல் பார்த்து கொள்வது அவசியம்.
மோர், ஜூஸ், இளநீர், உப்புக்கரைசல் போன்றவற்றை வழங்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
குறிப்பாக தண்ணீருடன், ஓ.ஆர்.எஸ் (ORS) பவுடரைக் கலந்து ஒவ்வொரு முறை மலம் கழித்த பின்னேயும் சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தையாக இருந்தால், தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.