குழந்தைகள் மத்தியிலும் மனச்சிதைவு நோய் அறிகுறி பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
மனச்சிதைவு எனும், 'ஸ்கிசோப்ரினியா' கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நோய் ஆண்கள், பெண்களுக்கு மட்டுமின்றி, இன்று குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இப்பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மாயத்தோற்றம், பிரமைகள் மற்றும் மிகவும் ஒழுங்கற்ற சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டு, சாதாரண வாழ்க்கையே சவாலாக மாறிவிடுகிறது.
குழந்தை பிறந்தவுடன் தாயின் அன்பு தாயிடம் இருந்தோ, பிறரிடம் இருந்தோ கிடைக்க வேண்டும். பசிக்கும் போது பால் கொடுப்பது, குழந்தைக்கு கிடைக்கும் முதல் நம்பிக்கை.
பசிக்கு தொடர்ந்து அழும் குழந்தைக்கு, உணவு கிடைக்காமல் தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்தால், நம்பிக்கை உணர்வு ஏற்படாமல் எதிர்காலத்தில் மனசிதைவு நோய் ஏற்படவும் வழிவகுக்கும்.
தற்போது, இதற்கான அறிகுறிகளை 5 வயது குழந்தைகளிடம் கூட காண முடிகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
தாய் கண்டுகொள்ளாமல் உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது, குடும்பத்தில் அடிக்கடி சண்டை, கூச்சல் ஏற்படுதல், தனிமையில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் மனச்சிதைவு ஏற்படும்.
குற்ற உணர்வை துாண்டி விடுதல், பாலியல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சூழல்களில் வளரும் குழந்தைகளுக்கும் அவை ஏற்படும்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மனச்சிதைவு போன்ற பெரிய பாதிப்புகளில் சிக்காமல் தப்பிக்க இயலும்.