மன அழுத்தத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
மனநலம் தொடர்பான எந்த பிரச்னை வந்தாலும், அதைக் குறித்து, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
மன அழுத்தம் என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களில் ஏற்படும் மாற்றத்தினால் வரும் பிரச்னை.
அது இருப்பது உறுதி செய்யப்பட்டால், மனநல ஆலோசனையுடன் மருந்துகளும் தேவைப்படும்.
பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, உடல், மனநல அறிகுறிகளை குறைக்க மருந்துகள் உதவும்.
மன அழுத்தத்தில் உள்ளவர்களை, அவர்களின் நிலையில் இருந்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மன அழுத்தம் இருந்தால், டாக்டரை ஆலோசிக்காமல் மருந்து சாப்பிடுவது, வீட்டில் இருப்பவர்களின் கருத்தைக் கேட்பது, மாற்று முறைகளை துவக்கத்திலேயே பின்பற்றுவது தவறானது.
முறையான ஆலோசனை, மருத்துவ சிகிச்சையோடு, யோகா, தியானம், ஆன்மிக விஷயங்களை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
மேலும் வாழ்க்கை முறை, உணவப் பழக்கத்தில் அவசியமான மாற்றங்களைளைச் செய்தால், மன அழுத்தத்தில் இருந்து, முற்றிலும் வெளியில் வரலாம்.