குழந்தைகளுக்கு எப்போது முதல் உணவு கொடுக்க வேண்டும்?

குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

6 முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் ஒவ்வொன்றாக கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்தி விட்டு கூழ், சோறு கொடுக்கும் போது வாந்தி போன்ற ஒவ்வாமை ஏற்படும்.

தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவாக இட்லி, சோறு, பழங்கள், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவற்றை கொடுத்தால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படாது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் அரிதாக ஏற்படக்கூடியது. அப்போது பால் பவுடர், பசும்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

முதல் ஒரு மாதத்திற்கு 500 மி.லி., பசும்பாலில் 250 மி.லி., தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். பின் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு கொடுத்தால் குழந்தைகளுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்து சென்றடையும்.