மேகங்கள் மிதப்பது ஏன்?

சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே செல்கிறது.

வளிமண்டலத்தில் அவை குளிர்ந்து காற்றில் மிதக்கும் துாசிகள் மீது நீர்த்துளிகளாக சேர்கிறது.

இந்த நுண்ணிய நீர்த்துளிகள், பனித்துளிகளே மேகமாக உருவாகின்றன.

ஒரு சராசரி மேகத்தின் எடை என்பது 500 மெட்ரிக் டன் இருக்கும்.

அதே போல, சராசரி மேகத்தின் அடர்த்தி என்பது, ஒரு கன மீட்டருக்கு, சுமார் 1.003 கிலோ இருக்கும்.

இந்த அடர்த்தியானது அதை சுற்றியுள்ள காற்றை விட, சுமார் 0.4 சதவீதம் குறைவு.

காற்றின் அடர்த்தியை விட, மேகத்தின் அடர்த்தி குறைவாக இருப்பதால் மேகங்கள் மிதக்கின்றன.