மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாகி புளித்த ஏப்பம் வருவது ஏன்?

பிரியாணி, அசைவ உணவுகளை சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாகி புளித்த ஏப்பம் அடிக்கடி வர முக்கிய காரணம் செரிமானக்கோளாறு தான். ஆரம்ப நிலை இது.

பொதுவாக உணவை அவசர அவசரமாகவும், நன்றாக மென்று சாப்பிடாமல் பலரும் அப்படியே விழுங்கி விடுகின்றனர்.

அதாவது வாயில் உமிழ்நீர் மூலம் நடக்க வேண்டிய செரிமான வேலையை, அப்படியே வயிற்றுக்குள் தள்ளிவிடுவதால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதுவே, வயிறு உப்புசமாகி விடுவது, புளித்த ஏப்பம் வருவதற்கு காரணம். இதை துவக்க நிலையில் சரி செய்து விடலாம்.

பசிக்கும் போது சாப்பிட வேண்டும். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. நமது உடல் உழைப்பிற்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி புளிச்ச ஏப்பம் உள்ளவர்கள் இருவேளை உணவும், ஒரு நேரம் பழங்கள், பச்சை காய்கறிகள் சாப்பிடலாம்.

நன்றாக சாப்பிட விரும்புகிறோம் என்றால் காலை 9:30 மணிக்குள் மற்றும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணிக்குள் என இருவேளை மட்டும் சாப்பிடலாம்.

உமிழ் நீர் சுரப்பு பிரச்னை மற்றும் அல்சர் அதாவது வயிற்றில் புண் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.