பாதாமை தோலுடன் ஏன் சாப்பிடக்கூடாது?
நீரில் ஊற வைத்த பாதாமில், 'லிபேஸ்' என்ற நொதி வெளிப்படும். இதை உண்டால் எளிதில் செரிக்கும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் குணம், ஊற வைத்த பாதாமுக்கு உண்டு; இதயத்துக்கு உகந்தது.
ரத்தத்தில், 'ஆல்பா டேகோபெரோல்' என்ற பொருள் அதிகரிக்க செய்வதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
இதிலுள்ள கொழுப்பு எளிதில் வயிற்றை நிரப்பி விடும் என்பதால், நொறுக்குத்தீனி தின்பது கட்டுப்படும்; உடல் எடை குறையும்.
'டேமின்' என்ற வேதிப் பொருள், பாதாம் பருப்பின் தோலிலுள்ளது.
இது, பருப்பிலுள்ள நுண்ணுாட்டச் சத்தை, முழுமையாக செரிமான மண்டலம் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும்.
தினமும், 8 - 10 பாதாம் சாப்பிடுவதால், இதிலுள்ள அமினோ அமிலம், மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும்.
மேலும், இதிலுள்ள வைட்டமின் பி17, கேன்சர் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும்.