பர்சனல் லோனை முன்கூட்டியே கட்டினால் சிபில் ஸ்கோர் குறையுமா?

ஒருசிலர் பர்சனல் லோன் காலக்கெடு முடிவதற்குள், அதை ப்ரீ-குளோஸ் செய்ய நினைப்பர்.

ஆனால், அப்படி செய்யும் போது கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும் என ஒருசில வங்கி அதிகாரிகள் தெரிவிப்பப்பதால் தயக்கமடைவர்.

அப்படி முன் கூட்டியே கடனை அடைக்கும்போது, 5 முதல் 30 புள்ளிகள் வரை தற்காலிகமாக கிரெடிட் புள்ளிகள் சரியக்கூடும்.

ஆனால், அது ஒரு பிரச்னை இல்லை. ஏனெனில், உங்களுடைய மொத்த கடனையும் ஒழுங்காக செலுத்தி விட்டீர்கள் என்பதே, அடிப்படையில் உங்கள் ஸ்கோரை உயர்த்தி கொடுக்கும்.

உங்களுடைய மொத்த கடன் பட்டியலில், ஒரு கடன் நீங்குவதால் ஏற்படும் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் அல்காரிதம் மாறும் என்பதால் தான், இந்த தற்காலிக சரிவு ஏற்படும்.

மற்ற கடன்களை ஒழுங்காக செலுத்தி வந்தால், அடுத்த 3 முதல் 6 மாதங்களில், உங்களின் கிரெடிட் ஸ்கோர் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.