கிரெடிட் ஸ்கோர் விபரங்கள் பத்திரமாக இருக்குமா?

பல அடுக்கு பாதுகாப்புடன் தான் உங்களை பற்றிய தகவல்களை கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனங்கள் வைத்துள்ளன.

அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் இன்னொருவருடைய கிரெடிட் ஸ்கோர் விபரங்களை பார்த்துவிட முடியாது; பயன்படுத்தவும் முடியாது.

ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோரை பார்க்கும்போது, அதில் நீங்கள் செய்யாத நிதி பரிவர்த்தனை விபரம் இருப்பதாக தோன்றினால், உடனே 2 விஷயங்களை செய்யுங்கள்.

ஒன்று, அந்த கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனத்துக்கு இ - மெயில் அனுப்பி, எது உங்களுடைய பரிவர்த்தனை இல்லையோ அதை குறிப்பிட்டு புகாரளித்து, அந்த விபரத்தை நீக்குமாறு கேளுங்கள்.

இன்னொன்றையும் செய்யலாம். தற்போது இந்தியாவிலுள்ள 4 'கிரெடிட் ஸ்கோரிங்' நிறுவனங்களும் 'கிரெடிட் பிரீஸ்' (அ) 'கிரெடிட் லாக்' என்ற ஒரு பூட்டும் வசதியை உருவாக்கி தந்துள்ளன.

அந்த நிறுவனங்களை தொடர்புகொண்டு, 'என் கிரெடிட் ஸ்கோர் விபரங்களை யாருக்கும் காட்டக்கூடாது' என கேட்டு, உங்கள் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை பூட்டு போட்டு வைக்கலாம்.

இப்படி செய்யும்போது, எந்த வங்கியோ, இதர நிதி நிறுவனங்களோ, உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பார்க்க அனுமதி கிடைக்காது.

நாளை ஒருவேளை நீங்களே ஏதோ ஒரு கடன் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த பூட்டை நீக்கிவிட்டு தான் கடனுக்கு மனு செய்ய முடியும்.