இன்று உலக இட்லி தினம்!

பச்சிளம் குழந்தை முதல் பல் போன முதியோர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லி. இதன் மகிமையை போற்ற ஆண்டுதோறும் மார்ச் 30 ல் 'உலக இட்லி தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

இட்லிக்கு இருக்கும் மவுசு ஆரம்ப காலத்தில் பண்டிகைகள், விருந்துகள், திருவிழாக்களில் மட்டுமே இட்லியை பந்தியில் பார்க்க முடியும்.

தற்போது உடல் நலன் பேண மருத்துவர்கள் பரிந்துரைப்பது கூட இட்லிதான். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் தங்களது டயட்டில் இதை முக்கிய மெனுவாகவே வைப்பர்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இட்லியை தாங்கள் தோற்றுவித்ததாக உரிமை கொண்டாடினாலும், அது இந்தோனேசியாவையே தோன்றிய இடமாக கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.

பசிக்கு இது ஒரு நல்ல உணவாகவும் நார்ச்சத்து புரதச்சத்து போன்றவற்றிலும் சிறந்து விளங்குவதால், 17ஆம் நூற்றாண்டில் தமிழர்களால் இதை இட்லி என்று அழைக்கப்படதாக கூறுவதுண்டு.

தற்போது வெஜிடபிள் இட்லி, ஸ்வீட் இட்லி, சிறுதானிய இட்லி, ப்ரைடு இட்லி, நெய் இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி, இட்லி கட்லட், காளான் இட்லி என இட்லியிலும் பல வகை வந்துவிட்டது.