நிரந்தரமாக உடலில் எந்த பாகத்திலும் டாட்டூ கூடாது... டாக்டர்கள் சொல்வதென்ன?  
        
இன்றைய இளைஞர்கள்... ஆண்களும், பெண்களும் கழுத்து, கைகள், முதுகு, கால், மணிக்கட்டு போன்ற பகுதிகளில், டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.
        
இது உடலினுள் நோய்க்கிருமிகளை எளிதாக நுழையச் செய்யும்; நோய் தொற்றையும் ஏற்படுத்தும்.
        
டாட்டூ
 வரைந்தவர்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெறவோ, அவர்களுக்கு தானம் 
கொடுக்கவோ முடியாது. ஏனென்றால், டாட்டூ வழியாக கிருமிகள் 
நுழைந்திருக்கும்.  
        
தானம் செய்யும் போது குத்தப்படும் ஊசி வாயிலாக, மேற்புறத்தில் வரையப்பட்டுள்ள டாட்டூவிலுள்ள ரசாயனங்கள், உடலின் உள்ளே சென்று நோயை ஏற்படுத்தும்.
        
இதனால் தோலில், புற்றுநோய் கூட ஏற்படலாம். நிரந்தரமாக வரைவதால், பல தொற்று வியாதிகளை வரவழைத்து விடும்.
        
நிரந்தரமாக
 உடலில் ஏதாவது ஒரு பகுதி, செயலிழந்து போகவும் கூடும். எனவே, பெற்றோர்தான் 
பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி, வழி நடத்த வேண்டும்.