இந்த டிசம்பரில் கோகர்ணாவுக்கு விசிட் செய்ய 5 காரணங்கள்

கர்நாடகாவிலுள்ள கோகர்ணா கடற்கரை நகரம், டிசம்பர் மாத விடுமுறைக்கு உகந்த இடமாகும்.

இதமான வானிலை... லேசான வெப்பநிலை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கடல் காற்று என இதமான சூழலுடன் கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்.

அமைதியான கடற்கரைகள்... அதிக மக்கள் கூட்டம் இல்லாத்தால், ரிலாஸ்காக இயற்கை அழகை ரசிக்கலாம்.

டிரெக்கிங்... அரபிக்கடலின் அழகை ரசித்துக்கொண்டே சுற்றியுள்ள மலைகள், கடலோர பாதைகளில் டிரெக்கிங் அல்லது வாக்கிங் செல்லலாம்.

ஆழ்ந்த தியானம்... அமைதியான சூழலில் தியானம், யோகா செய்ய விரும்புவர்களுக்கு கடற்கரை காற்று புத்துணர்ச்சியை அளிக்கும்.

ஆன்மிக தொடர்பு... கோகர்ணா பழங்கால கோவில்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாபலேஷ்வர சுவாமி கோவில் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.