கொளுத்தும் வெயிலில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 5 மூலிகைகள்...!

துளசி... இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளுக்கு நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவும் மூலிகையாகவும் இது உள்ளது.

எனவே உடல் வெப்பத்தை தணிக்க தினமும் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.

தினமும் புதினாவை எடுத்து கொள்வதன் மூலம் கோடையில் உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இது செரிமானத்திற்கு உதவி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஃரெஷ்ஷான புதினா இலைகளுடன் கூடிய தண்ணீரையோ அல்லது எலுமிச்சை ஜூஸில் இலைகளைச் சேர்த்தோ குடிக்க்கலாம்.

கற்றாழை ஜூஸை உட்கொள்வது செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

கொத்தமல்லியானது கோடை காலத்தில் ஏற்படும் பல செரிமான பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுவதுடன், உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

உணவில் நேரடியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்தோ அல்லது ஃபிரெஷ்ஷான இலைகளை கொண்டு சட்னி செய்தோ சாப்பிடலாம்.

இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கோடையின் வெப்பம், சூரிய ஒளி போன்ற காரணிகளால் உண்டாகும் அழற்சிக்கு தீர்வாக இருக்கும். இதில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.