குளிர்காலத்தில் உற்சாகமூட்டும் 5 தேநீர்கள்
மசாலா டீ... பாலுடன், ஏலக்காய், பட்டை, இஞ்சி மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படும் இந்த மசாலா டீ, உடலில் நொயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இஞ்சி டீ... தண்ணீரில் சிறிதளவு இஞ்சியை துண்டுகளாக சேர்த்து கொதிக்க வைத்து தேன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த இஞ்சி டீ, தொண்டைக்கு இதமளிக்கும்.
கோல்டன் டீ (அ) மஞ்சள் டீ... மஞ்சள் தூள், மிளகை பால் அல்லது நீருடன் தேன் கலந்து குடிக்கலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
புதினா டீ... பிரெஷ்ஷான அல்லது உலர்ந்த புதினா இலைகளை கொண்ட புதினா டீ, புத்துணர்ச்சியூட்டுவதுடன், செரிமானத்துக்கு உதவுகிறது.
பட்டை மற்றும் ஆப்பிள் டீ... சிறிதளவு டீத்தூளுடன் ஒருசில பட்டை மற்றும் ஆப்பிள் பழ துண்டுகளை சேர்த்து கொதிக்கவிடவும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் பழத்தை சேர்க்காமல் டீத்தூளுடன் ஒருசில பட்டைகளை சேர்த்து கொதிக்க விட்டும் குடிக்கலாம்.