தினமும் முந்திரிப்பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்

முந்திரிப்பருப்பில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கின்றன; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் பண்புகள், நார்ச்சத்து ஆகியவை ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

இதிலுள்ள மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துகின்றன; ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

வைட்டமின் ஈ, சருமத்தை பாதுகாத்து வயதாகும் தோற்றத்தைத் தாமதப்படுத்துகிறது.

வைட்டமின் ஈ மற்றும் பி மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. அதேவேளையில் அதிக கலோரி உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான நபர் தினசரி 30 கிராம் முந்திரி சாப்பிடுவது பாதுகாப்பானதாகும். உடல்நிலை வயது மற்றும் பிற காரணிகளை பொறுத்து இந்த அளவு மாறுபடக்கூடும்.