உடல் எடையை குறைக்க உதவும் 6 ஜூஸ்கள்

வெள்ளரி மற்றும் புதினா ஜூஸ்... குறைந்த கலோரிகள் மற்றும் நீர்ச்சத்து கொண்டது வெள்ளரிக்காய்; புதினா செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

பச்சை ஆப்பிள் மற்றும் கேல் ஜூஸ்... பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவாக உள்ள நிலையில், நார்ச்சத்து நிறைந்துள்ளது. கேல் அல்லது பரட்டை கீரை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

தர்பூசணி ஜூஸ்... இதிலுள்ள குறைவான கலோரிகள் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பீட்ரூட் மற்றும் மாதுளை ஜூஸ்... கல்லீரலிலுள்ள நச்சுவை நீக்க பீட்ரூட் உதவுகிறது; செரிமானம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

அன்னாசி மற்றும் வெள்ளரி ஜூஸ்... அன்னாசிப்பழத்திலுள்ள புரோமிலைன் பண்புகள் செரிமானத்துக்கு உதவுகிறது. வெள்ளரிக்காய் நீரேற்றமாக வைக்க உதவுகிறது; கலோரியும் குறைவு.

கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ்... கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது; கலோரிகள் குறைவாக உள்ளன. அதேவேளையில், இஞ்சியில் கொழுப்பை எரிக்க உதவும் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன.