உடல் எடையை குறைக்க உதவும் 7 பழங்கள்

ஆப்பிளில் கலோரிகள் குறைவாக உள்ள நிலையில் நீர், நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பசி உணர்வை எளிதாக நிறைவு செய்கிறது; ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.

தர்பூசணி... 90 சதவீதத்துக்கும் அதிக நீர்ச்சத்து இதிலுள்ளது. உடலை நீரேற்றமாக வைப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

கொய்யா ஒரு குறைந்த கலோரி பழமாகும். அதிக நார்ச்சத்து உள்ளதால், பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

ஆரஞ்சு... அதிக கலோரிகளை சேர்க்காமல் பசி உணர்வை பூர்த்தி செய்ய உதவுகிறது. நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

அன்னாசிப்பழத்திலுள்ள ப்ரோமெலைன் என்ற நொதி செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்று உப்புசத்தை குறைக்கும். குறைந்த கலோரிகளே இதிலுள்ளது.

நார்ச்சத்து நிறைந்த பழங்களில் பேரிக்காய் ஒன்றாகும். செரிமானத்தை சீராக்கி வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கிவியில் கலோரிகள் குறைவாக இருப்பினும், நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுவதால், எடையை கட்டுக்குள் வைக்கலாம்.