குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 8 பழங்கள்

வைட்டமின் சி நிறைந்துள்ள சப்போட்டா செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குளிர்காலத்துக்கு தேவையான இயற்கையான ஆற்றலை வழங்குகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள ஆப்பிள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி, செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

பப்பாளியில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது; குளிர்கால நோய்கள், சருமப்பிரச்னைகளை தவிர்க்க இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன.

திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதால் குளிர்காலத்துக்கு ஏற்றது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்த பேரீச்சம் பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்த மாதுளம்பழம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

வைட்டமின் சி நிறைந்துள்ள கிவி, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் குளிர்கால ஆரோக்கியத்துக்கு உகந்தது.