ஆரோக்கியமான சிற்றுண்டி... முளைகட்டிய பாசிப்பருப்பு!
தேவையானப் பொருட்கள்: முளை கட்டிய பாசிப்பயறு - 1 கப், எண்ணெய்- 2 டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி - தலா 2.
சீரகம் - 0.25 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 0.50 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவையானளவு.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகத்தை போடவும்.
இது வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
மசாலா நன்றாக வதங்கியதும், முளைகட்டிய பாசிப்பருப்பை சேர்த்து, ஒரு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.
மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்தால், சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி ரெடி.
இதில், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவினால், சுவை அள்ளும்.