ஆப்பிள் பாயாசம் எளிதாக செய்யலாம்!
தேவையானப் பொருட்கள்: ஆப்பிள் - 2, பால் - 500 மி.லி., சர்க்கரை - 0.50 கப், நெய் - 1 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - 10 பீஸ், ஏலக்காய் துாள் - 0.25 டீஸ்பூன்.
ஆப்பிளை கழுவி தோலை நீக்கி விட்டு, நன்றாக துருவிக்கொள்ளவும்.
பின், கடாயில் சிறிது நெய் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில், துருவிய ஆப்பிளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி சுண்ட விட்டு, ஏற்கனவே தயாரித்து வைத்த ஆப்பிள் விழுதை சேர்க்கவும்.
அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து மிதமான தணலில் கொதிக்க விடவும்.
இறுதியில், முந்திரி, திராட்சை சேர்த்தால், இப்போது சுவையான ஆப்பிள் பாயசம் ரெடி.