இன்று முட்டாள்கள் தினம்!

ஏப்ரல் 1 என்றாலே, முட்டாள்கள் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். அதன் வரலாறு குறித்து பார்ப்போம்.

ஐரோப்பாவின் பல நாடுகளில், 16ம் நுாற்றாண்டு வரை, ஏப்., 1ம் தேதி தான், புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டது.

பின்னர், 1562ல் இருந்த அப்போதைய போப், 13வது கிரிகிரி என்பவர், பழைய ஜுலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒழித்து, புதிய கிரிகோரியன் ஆண்டு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி, ஜன., 1ம் தேதி, புத்தாண்டு தினமாக கருதப்பட்டது.

இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பழைய வழக்கப்படி, ஏப்., 1ம் தேதியையே, புத்தாண்டாக கொண்டாடினர்.

இப்படி கொண்டாடுபவர்களை, 'ஏப்ரல் முட்டாள்' என்று அழைத்தனர். அவர்களுக்கு, முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பி, ஏமாற்றி மகிழ்ந்தனர்.

இந்த வேடிக்கை கேலிக்கூத்துகள், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேகமாக பரவி, இன்று உலகம் முழுவதும் பிரசித்தமாகி விட்டது.