இன்று முட்டாள்கள் தினம்!

ஜூலியன் காலண்டரில் ஏப். 1 தான் புத்தாண்டு. பின் 13ம் போப் கிரிகோரி 1582ல் புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.

இதில் ஜன 1 புத்தாண்டாக மாற்றப்பட்டது. இதை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை பயன்படுத்த துவங்கின.

1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது.

புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை கிண்டல் செய்வதற்காக ஏப்.1ல் 'முட்டாள்கள் தினம்' அறிமுகமானது. பின் அனைத்து நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தகைய கேலிக்கூத்துகள் சுற்றிச் சுழன்று பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் 'ஏப்ரல் பூல்' விரிந்து பரவி இருக்கிறது.

மேலும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் முட்டாள் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.