இன்று தேசிய தாய்மை பாதுகாப்பு தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்.11ல் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மையை போற்றும் விதமாகவும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

2003 இல், இந்திய அரசு கஸ்தூரிபா காந்தியின் பிறந்த நாளான ஏப்ரல் 11 ஆம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்தது.

இது கர்ப்பம், பிரசவம் மற்றும் அதற்குப் பிந்தைய சேவைகளின் போது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைப்பது வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை சமூக ரீதியாக அறிவித்த உலகின் முதல் நாடு இந்தியா. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம்.

இந்நேரத்தில் அவர்களது ஆரோக்கியம், பிரசவத்துக்குப்பின் தாய், குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, தரமான மருத்துவ வசதி, பிரசவத்துக்குப்பின் குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும்.