இன்று அறிவுசார் சொத்துரிமை தினம்

ஒவ்வொரு ஆண்டும் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்., 26ல் கொண்டாடப்படுகிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.

இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம்.

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) 2000ல், 1970 இல் WIPO மாநாடு நடைமுறைக்கு வந்த தினத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்படிக்கப்படுகிறது

ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இத்தினம் கொண்டாடப்படுகிறது