குழந்தைகள் விளையாடும் போது கவனம் அவசியம்...
கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதுாகலம்தான். விளையாடும் போது, எங்காவது உயரத்தில் இருந்து தவறி விழ வாய்ப்புண்டு.
இப்படி குழந்தைகள் விழுந்தவுடன், பதற்றத்தில் என்ன செய்வதென தெரியாமல், முதலுதவி சிகிச்சை அளிக்க ஆரம்பித்து விடுவர்.
விழுந்த இடத்தில் வீக்கம், வலி இருந்தால், உடனே அப்பகுதியை அழுத்தி தேய்ப்பது, எண்ணெய் போட்டு நீவிவிடுவது கூடாது. இது ஆபத்தில் முடியலாம் என, டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கீழே விழும் போது குழந்தைகள் முதலில் கையை ஊன்றுவது வழக்கம்.
அழுத்தம் காரணமாக கை மூட்டு பகுதியில் எலும்பு பாதிக்கப்படலாம். இதனால், கை, கால் திருப்ப முடியாமல் அவதிப்படலாம்.
இச்சமயங்களில் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறே, எண்ணெய் கொண்டு நீவிவிடுவது தான். இதனால் அப்பகுதியில் உள்ள தசை, எலும்பாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம்.
கை மூட்டு நடுவே பந்தை வைத்து மூடினால், எப்படி இருக்குமோ அப்படியான நிலைக்கு எலும்பு மாறிவிடும். தவறாக எலும்பு இணையவும் வாய்ப்புள்ளது.
எலும்பு முறிவு சார்ந்த பிரச்னைகளை எக்ஸ்-ரேவில் கண்டறியலாம்.
இப்படி நிகழும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்து தான், அடிப்பட்ட பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
சிகிச்சைக்கு பின், 3-6 மாதங்கள் வரை, எலும்பு சரியாக இணைந்ததா என கண்காணிக்க வேண்டும் என்பது கூறிப்பிடத்தக்கது.