பரிட்சைக்கு தயாராகும் மாணவர்களே பதற வேண்டாம்!
மாணவர்கள் தேர்வு முடிவு பற்றியோ, இல்லை தனது கனவுகள் நிறைவேறுமா என அதிகமாக சிந்தித்து கவலைப்படுவதினால் மன அழுத்தம் உண்டாகிறது.
மனநிலை திடமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு முன்னர் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும்.
தேர்வு பயம், மனநெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வு மனப்பான்மை, அதீத நம்பிக்கை, படிக்கும் திட்டம் இல்லாமை போன்ற விஷயங்கள் நம்மை அண்டவிடக்கூடாது.
ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் படிப்பது, எத்தனை மணிநேரம் படிப்பது என்று முடிவு செய்வது இன்னும் பலனளிக்கும்.
மாதாந்திர தேர்வுகளின்போது நீங்கள் தவற விட்ட கேள்விகளை முதலில் தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்.
45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து படிக்காமல், சிறிது நேரம் இடைவெளி எடுத்து படித்தால் கவனம் நன்றாக இருக்கும்.
5 அல்லது 10 நிமிடம் நடை பயிற்சி அல்லது இயற்கைச் சூழ்நிலையில் செல்லுதல் போன்ற வழக்கங்களை மேற்கொள்ளலாம்.
உடல்ரீதியாக, தேர்வுக்கு முன்புவரை உள்ள காலங்களில் அளவான தூக்கம் அதாவது 6-8 மணி நேரம் , ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் அவசியம்.