வடாம் விற்பனைக்கு இனி தடை!
தமிழகத்தில் கடைகள், சந்தைகள் மற்றும் பொருட்காட்சிகளில் குழந்தைகளைக் கவரும் வகையில் வடாம் மற்றும் கலர் அப்பளங்கள் விற்கப்படுகின்றன.
இதில், ஆபத்தான ரசாயன நிறமூட்டிகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி தயார் செய்த வடாம்களை, விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
எனவே, மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு, கலர் அப்பளங்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதிலாகப் பாரம்பரிய முறையில் உளுந்து மற்றும் அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும், தரமான அப்பளங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் வடாம் சாப்பிட்டால் அலர்ஜி, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஏற்படலாம்; கவன சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென, உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.