கலர்புல்லான பீட்ரூட் பாயசம் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: பீட்ரூட் - 1, பால் - அரை லிட்டர், சர்க்கரை தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் துாள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.
ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி, சூடானவுடன் முந்திரி, திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில், துருவிய பீட்ரூட்டை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நெய்யில் நன்றாக வதக்கவும்.
பீட்ரூட் நன்றாக வதங்கியதும், பால் சேர்த்து, நன்கு வேகும் வரை மிதமான தணலில் கொதிக்க விடவும்.
பீட்ரூட் வெந்தவுடன், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
இறுதியாக, ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால், பீட்ரூட் பாயசம் இப்போது ரெடி.
இந்த பாயசம் செய்யும் போது பீட்ரூட் வாசனையை குறைக்க விரும்பினால், சிறிதளவு வேக வைத்த பாசிப்பருப்பு, ஜவ்வரிசி அல்லது , சேமியாவை சேர்க்கலாம்.