சருமத்துக்கு இயற்கையான பொலிவை தரும் பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமப் பொலிவு மற்றும் கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன.
சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முதுமையின் பிற அறிகுறிகளைக் குறைத்து சரும ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் கூந்தல் உதிர்வை தடுப்பதுடன், சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதிலுள்ள பீட்டாலைன்கள் சருமத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், சருமம் பளபளப்பாக இருக்கக்கூடும்.
இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவுவதால், சருமத்துக்கு கூடுதல் பொலிவு கிடைக்கிறது.
இது டீடாக்ஸ் உணவாக இருப்பதால், உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மட்டுமின்றி பளபளப்பான சருமப்பொலிவுக்கும் வழிவகுக்கிறது.