அரிய மூலிகை ஆடாதொடையின் அற்புத பயன்கள்!!

ஆடுகள் தொடாத இலை என்பதுவே, ஆடாதொடை என்று மருவி உள்ளது. மனிதர்கள் வாழத்தேவையான அளவு ஆக்சிஜனை வெளியிடுவதால், இது 'ஆயுள் மூலிகை' என்றும் அழைக்கப்படுகிறது

பெட்டைன், அனிசோட்டைன், இன்டோல் டீ ஆக்ஸி, வாசிசினோன் போன்ற வேதிப்பொருட்கள் ஆடாதொடாவின் இலைகளில் உள்ளன.

ஆடாதொடை, நுரையீரல் நோய்களை நீக்க வல்லது. குறிப்பாக நுரையீரல் அறைகளில் படியும் கசடுகளை நீக்கி சுத்தப்படுத்த உதவுகிறது.

நமது உடலில் புழு, பூச்சிகளை அகற்றும். நுண்கிருமிகளை அழிக்கும். இலைகளின் சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி, சுரப்பிக்கட்டி போன்ற பிரச்னைகளை குணமாக்கும்.

உடலில் ஏற்படும் காயங்களுக்கும் ஆடாதொடை இலையுடன் வெற்றிலையை சேர்த்து, மென்று விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும்.பெண்களின் மாதவிடாய் கால பிரச்னைகளை, ஆடாதொடை சரி செய்யும்.

ஆடாதொடை மற்றும் கண்டங்கத்திரி வேர்களை இடத்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, குடிநீராக, திப்பிலி பொடி சேர்த்து அருந்தினால், தொண்டை புகைச்சல் சரியாகும்.