நிலவேம்பு கஷாயம் யார் குடிக்கலாம்? வைரஸ் காய்ச்சலுக்கு குடிக்கலாமா?
டெங்கு, சிக்குன்குனியா போன்றவைக்கு 9 மூலிகைகளை கொண்ட நிலவேம்பு கஷாயம் நல்ல பலன் தரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிலவேம்புடன் சுக்கு, பற்பாடகம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், மிளகு, சந்தனம் உட்பட 9 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகிறது.
வீட்டில் கஷாயம் தயாரிப்பதாக இருந்தால் 5 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை 200 மி.லி., தண்ணீரில் சேர்த்து 50 மி.லி., ஆக நன்கு காய்ச்ச வேண்டும்.
தொடர்ந்து 5 நாட்கள் காலை, மாலையில் குடித்தால் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமாகலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் நிலவேம்பு கஷாயத்தை அளவு முறைப்படியே குடிக்க வேண்டும். மேலும் வயிற்று போக்குடன் காய்ச்சல் உள்ளவர்கள், டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் கஷாயம் குடிக்க கூடாது.
வயிற்று புண் உள்ளவர்கள் உணவுக்குப் பின் அளவு குறைவாக குடிக்கலாம்.
3 முதல் 6 வயதினருக்கு 10 மில்லி, 6 முதல் 12 வயதினருக்கு 15 மில்லி, 13 முதல் 17 வயதினருக்கு 30 மில்லி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 60 மில்லி வரை குடிக்கலாம்.
டெங்கு, சிக்குன்குனியாமட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் அனைத்திற்கும் தடுப்பு மருந்தாக 3 நாட்கள் சாப்பிடலாம்.