புன்னகை பூக்களும்... பூனைகளும்!

பூனைகளுடன் அதிக நேரம் நெருக்கமாகச் செலவிடும் உரிமையாளர்கள் அதிகம் நேர்மறையான மனநிலையிலும், புன்னகையுடனும் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஜப்பானின், கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வின் பேராசிரியரும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பூனை நிபுணருமான டாக்டர் சாஹோ தகாகி, கூறுகையில்...

தினசரி வாழ்க்கையில் சிலர் பூனைகளுடன் நெருக்கமாக நேரத்தை செலவிடுவர்.

இது அந்த உரிமையாளர்களின் உற்சாக நிலையை (vigour scores) அதிகரிப்பதோடு தொடர்புடையது என்பதைக் கண்டறிந்தோம் என்றார்.

எனவே, உரிமையாளர்களிடையே உள்ள நேர்மறையான மனநிலையானது, அவர்கள் பூனைகளை எவ்வளவு காலம் வளர்த்தார்கள் என்பதோடு தொடர்புடையதாக இல்லை.

மாறாக, அவர்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் இடையில் ஒட்டுமொத்த உடல்ரீதியான நெருக்கத்தோடு தொடர்புடையதாகவே இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதாவது, உரிமையாளர்களின் நேர்மறையான உணர்ச்சிகள், அவர்களின் தினசரி வாழ்வில் பூனைகளுக்கு அருகில் செலவிடும் நேரத்தின் அளவோடு மிகவும் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.