கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகளை சுயமாக எடுக்கலாமா?
உடல்வலிக்காக கால்சியம், வைட்டமின் - டி மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின்றி பலரும் எடுத்து கொள்வது அதிகரித்து வருகிறது.
இதனாலேயே சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே, டாக்டர் பரிந்துரை இல்லாமல், இம்மாத்திரைகளை தொட வேண்டாம்.
கால்சியம் நிறைந்த உணவு சாப்பிடுவது, சூரிய ஒளியில் நிற்பது மூலம் வைட்டமின்-டி பெறுவதே சிறந்தது.
வாரத்துக்கு 4 நாட்களுக்காவது அரை மணி நேரம் வீதம் சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டுமென்பது டாக்டர்களின் அட்வைஸ். எனவே, தினமும் காலை 7 - 10 மணிக்குள் அரை மணி நேரம் ஒதுக்கலாம்.
பால், சோயா பால் சால்மன் மீன், மத்தி மீன், சூரை மீன், முட்டையின் மஞ்சள் கரு, செறிவூட்டப்பட்ட தானியங்கள், ஆரஞ்சு சாறு போன்ற வைட்டமின் டி உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.