பொன்னுக்கு வீங்கி வர காரணமும் பாதுகாப்பு முறைகளும்...
பொன்னுக்கு வீங்கி என்பது மம்ப்ஸ் வைரசால் ஏற்படும் தொற்று.
பொதுவாக 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கக்கூடியது. தொற்று ஏற்பட்ட பின் 14 முதல் 25 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியும்.
உடலில் அறிகுறிகளாக காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ்நீர் சுரப்பியில் வீக்கம், வலி, காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை ஏற்படலாம்.
மூளை காய்ச்சல் பாதிப்புகூட வரலாம். காற்று, உமிழ் நீர் வழியாக மற்றவருக்கு எளிதில் பரவும்.
ரத்தம், உமிழ்நீர் பரிசோதனை செய்து தொற்றை கண்டறியலாம்.
முறையான முக கவசம், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவை தொற்று பரவாமல் தடுக்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் மென்மையான உணவுகள், வெந்நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். வீக்கத்திற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசியினை இரு தவணைகளில் செலுத்த வேண்டும். அனைத்தையும் மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும்.