உங்களது எல்லா சந்தேகங்களையும் தீர்க்க வந்துவிட்டது சாட் ஜிபிடி

ஓப்பன் ஏஐ என்ற நிறுவனம், சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் பொருந்திய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது.

நமக்கு வேண்டிய ஒரு தகவலைப் பெற, தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாக உள்ளன இணைய தேடுபொறிகள்

ஆனால் அதைப் பற்றித் தேடி அந்த லிங்கினுள் சென்று தகவலை எடுக்க பலரும் கடினமாக உணர்கிறார்கள்.

எனவே அதனை எளிமையாக்கும் முயற்சியாக சாட் ஜிபிடி என்ற செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆர்&டி நிறுவனத்தில், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

எதிர்கால தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் இவர்கள், மனிதர்களுக்குப் பயன் ஏற்படுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறுகின்றனர்.

நாம் ஏதேனும் ஒரு கேள்வி கேட்டால், சக மனிதர்கள் கூறுவது போல சேட் பாக்ஸில் அதற்கான பதிலை அளிக்கிறது.

இது நாம் கேட்கும் தலைப்பில் கட்டுரை, கவிதை முதலியவற்றையும் எழுதி தருகிறது. மேலும் ஆலோசனையும் வழங்குகின்றது.

இது அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.