முருகனும் காவடியும்! கந்தனுக்கு அரோகரா…

காவடிகளில் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. அவற்றில் சில காவடிக்கு கிடைக்கும் பலன் குறித்து பார்ப்போம்.

அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி.

''பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா!'' என வணங்குவதே பால்காவடி.

துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.

மனைவி, குழந்தைகள், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாக என்னுடன் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பாய் முருகா... என வேண்டுவது புஷ்பக்காவடி.

கடலில் உள்ள மீன் போலவும், கருடனைக் கண்ட பாம்பு போலவும் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்பக் காவடிகள்.

கந்தன் மீது முழு மன நம்பிக்கையுடன், முருகனுக்குரிய தினத்தில், சரியான விரத முறைகளை கையாண்டு, காவடி எடுத்தால் கந்தன் மனம் மகிழ்ந்து அருள்வார்.