குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் கேக்
சீஸ் கேக் செய்ய முதலில் ஒரு பவுலில் பட்டர் பேப்பர் வைக்கவும்.
பின், ஒரு சிறிய பவுலில் தேவையானளவு பிஸ்கெட்டுகளை உடைத்து போட்டு, அதனுடன் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை பட்டர் பேப்பரில் வைத்து நன்கு செட் செய்து, பிரிட்ஜில் அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
நன்கு நுரை வந்தவுடன் அதனுடன், எடுத்து வைத்துள்ள சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் போன்றவற்றை சேர்த்து, ப்ளெண்டரில் நன்றாக அடிக்கவும்.
பின், கிரீம் சீஸை, அரை மணி நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த பிஸ்கட் பேஸ்டுடன் சேர்த்து, உங்களுக்கு பிடித்த கேக் வடிவங்களில் வடிவமைக்கவும்.
இந்த கிரீம் சீஸ் கலவையை பிரிஜில் இருந்து எடுத்து பிஸ்கட் பேஸ் உடன் சேர்த்து, கேக் மாதிரி வடிவமைக்க வேண்டும்.
தொடர்ந்து, லேசான தணலில் ப்ளூபெர்ரி பழங்களை சூடாக்கி, அதனுடன் சர்க்கரை போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை செய்து வைத்துள்ள சீஸ் கேக் மீது தடவி, 5 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்தெடுத்தால் சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் கேக் ரெடி.