சுவையான சிக்கன் முந்திரி சுக்கா ரெசிபி இதோ...
சிக்கனில் ஏதாவது புதிய டிஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அப்படி என்றால் சிக்கன் முந்திரி சுக்கா செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : அரை கிலோ சிக்கன், முந்திரி 50 கிராம், இரண்டு வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு தக்காளி
தேவையான பொருட்கள் : அரை கிலோ சிக்கன், முந்திரி 50 கிராம், இரண்டு வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு தக்காளி
செய்முறை : அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி போடவும். அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கி பொன்னிறமாக மாறும் போது, நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள், மிளகாய் துாள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சிக்கன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, தட்டால் மூடி வைக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் சுக்கா மசாலா சேர்த்து, நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடுங்கள்.
கடைசியாக கொத்தமல்லி இலை, மிளகு துாள் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான சிக்கன் முந்திரி சுக்கா தயார்.