நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தேங்காய் !

சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது கெடுதலானது என்று பலரிடம் தவறான கணிப்பு உள்ளது. ஆனால், இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சிறந்த உணவு என்பது டாக்டர்களின் கருத்தாகும்.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெயை அதிகம் சூடுபடுத்தக் கூடாது. அதனால், செக்கில் ஆட்டிய எண்ணெயை பயன்படுத்தலாம்.

தினமும் உணவில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால், படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

தேங்காய் துருவல், தேங்காய் பால் போன்றவற்றை எந்தளவு குறைவான வெப்பநிலையில் சமைக்கிறோமோ, அந்தளவுக்கு இதிலுள்ள வேதி அமிலம் சிதையாமல் முழுமையாக கிடைக்கும்.

இயற்கையான மோனோலாரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தாய்ப்பால், தேங்காய் தவிர வேறு எதிலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.