உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கி அசத்துங்க!
வாட்ஸாப்பில் விதவிதமான ஸ்டிக்கர்களை உங்கள் முகத்தோற்றத்திலேயே அனுப்புவது மிகவும் ஈஸிதான்.
இதற்கு சாட்ஜிபிடி-யை முதலில் ஓபன் செய்யவும். அதில், இடப்பக்கத்தில் 2 கோடுகள் அல்லது 3 புள்ளிகள் இருக்கக்கூடும்.
இதை கிளிக் செய்து இமேஜ் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்தால், பல விதமான ஐகான்கள் வரக்கூடும்.
அதில், ஸ்டிக்கர்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்து, கிரியேட் 3டி ஸ்டிக்கர் அல்லது சிபி என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
தொடர்ந்து, அருகிலேயே போட்டோ என்ற ஆப்சனை கிளிக் செய்து, புதிதாகவோ, கேலரியில் இருந்தோ உங்களுடைய அல்லது விருப்பமான போட்டோவை தேர்வு செய்தாலே போதும்.
உடனடியாக அதிலேயே பிராம்ட் வரக்கூடும். தொடர்ந்து, ஓரிரு நிமிடத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த போட்டோ விதவிதமான ஸ்டிக்கர்களாக வரக்கூடும்.
இல்லாவிட்டால், அந்த பிராம்ட்டை காப்பி, பேஸ்ட் செய்து மீண்டும் விருப்பமான புகைப்படத்தை அப்லோடு செய்தால், ஒரிரு நிமிடத்தில் ஸ்டிக்கர்கள் வரக்கூடும்.
ஸ்டிக்கர் இமேஜின் வலப்பக்கத்தில் அதை டவுன்லோடு செய்யவும், வாட்ஸ் ஆப்பில் நேரடியாக சேமித்து வைக்கவும் ஆப்சன் தரப்பட்டிருக்கும்.
எனவே, வலப்பக்கத்தை கிளிக் செய்து ஸ்டிக்கர்களை உங்களின் வாட்ஸ் ஆப்பில் சேமித்து, சாட் செய்யும் போது உங்களின் விதவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பி அசத்தலாம்.
இதில் அனிமேசன், கார்ட்டூன், 3டி என விதவிதமான ஸ்டிக்கர்களையும் உருவாக்கலாம்.