ஆபாச வலையில் சிக்கும் மாணவ, மாணவியர்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ஆபாச சைபர் மிரட்டல் மோசடிகள் சமீப காலமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்களின் அறிவுரைகளை பார்ப்போம்.

இளைஞர்களை சிக்கவைத்து, வீடியோ காட்சிகளை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் பற்றி, இளம் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .

தற்போதைய டிஜிட்டல் காலத்தில், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் பகிர்வது, வீடியோ கால் மூலம் ஆபாசமாக நடந்து கொள்வது போன்றவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வீடியோ, ஆடியோ, புகைப்படம் எதுவாக இருந்தாலும் பதிவு ஆகாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம்.

தெரிந்த நபர்களாகவே இருந்தாலும் இதுபோன்ற அந்தரங்க விஷயங்களை பகிரக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

ஆண்கள் அறிமுகம் இல்லாத மோசடி கும்பல்களிடமும், பெண்கள் காதலன், நண்பன் போன்றவர்களுக்கும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து மாட்டிக்கொள்கின்றனர்.

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து தவறான காட்சிகளாக உருவாக்கி மிரட்டுதல், தனிப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி பணம் கேட்டல் பிரச்னைகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பயந்து பணம் கொடுப்பது பிரச்னையை தீவிரப்படுத்தும் என்பதால், உடனடியாக புகார் அளிக்க முன்வரவேண்டும்.

ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா உதவி எண், cybercrime.gov.in இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.