எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு!ஸ்டார் 3.0 மென்பொருள் விரைவில் அறிமுகம்!
சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில், 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய புதிய வசதிகள் என்னென்ன?... சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு, பத்திரங்களை காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டாம்.
துவக்கத்தில், 10 வகையான பத்திரப்பதிவு பணிகள், முழுமையாக 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளப்படும்.
புதிய திட்டங்களில் வீடு, மனை வாங்குவோர், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பில்டர், மேம்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவை முடிக்கலாம்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில், மக்கள் விரும்பும் நேரத்தில், 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம்.
சார்-பதிவாளர் அலுவலகங்கள் பிரிக்கப்பட்ட நாட்களை கருத்தில் வைத்து, வெவ்வேறு அலுவலகங்களை அணுகாமல், வில்லங்க சான்றிதழ்களை ஒரே இடத்தில், ஆன்லைனில் பெறலாம்.
சான்றிடப்பட்ட பத்திரப் பிரதியை, மூன்று நாட்களுக்குள் வழங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சொத்து வாங்கும் மக்கள், அதற்கான வரைவு பத்திரங்களை தாமாக, 'ஆன்லைன்' முறையில் நான்கு கட்டங்களில் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
பத்திரப்பதிவில் இறுதி நிலையில் செலுத்தப்படும் கட்டணங்களை, க்யு.ஆர்., குறியீடு முறையில் செலுத்தலாம்.