மீதமான சப்பாத்தியில் சுவையான நூடுல்ஸ்
தேவையானப் பொருட்கள்: சப்பாத்தி - 3 - 4, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 1, கேரட் - 1, குடமிளகாய் -1 கப், தக்காளி - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் - தலா 1 டீஸ்பூன்.
முதலில் சப்பாத்திகளை கத்தியால், நுாடுல்ஸ் போன்று நீள, நீளமாக மெல்லியதாக வெட்டி கொள்ளவும்.
அதன்பின் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு, சில நிமிடங்கள் வதக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் போட்டு மூன்று நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
காய்கறிகள் வெந்த பின், தேவையான உப்பு சேர்க்கவும். சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, கை விடாமல் கிளறவும். இரண்டு, மூன்று நிமிடம் கிளறினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.
பள்ளி செல்லும் குட்டீஸ்களுக்கு டிபன் பாக்சில் கொடுத்தனுப்பலாம்; மாலை டிபனுக்கும் ஏற்றது.