சர்க்கரை அளவும் கால் வீக்கமும்...

பொதுவாக நீரிழிவு பாதித்தவர்களுக்கு கால் வீக்கம் வருவதுக்கு சில காரணங்கள் உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரகத்தில் சல்லடை போன்ற நெப்ரான் என்ற வடிகட்டும் திசுக்கள் சேதமடைவதால், புரதம் சிறுநீர் வழியே வெளியேறுவது, சிறுநீரக செயலிழப்பு, இதய பலகீனம் ஏற்படும்.

வயிறு வீக்கம் ஏற்பட அஜீரணம், மலச்சிக்கல், சிறுநீரக செயலிழப்பு மூலம் நீர் சேர்வது, வயிறு, குடல் சுருங்கி விரியும் தன்மை குறைபாட்டல் ஏற்படும்.

இந்த அறிகுறி இருந்தால் அருகில் உள்ள டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை செய்து அதில் புரதம், கிருமிகள் உள்ளனவா என்று அறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

பாதிப்பு இருந்தால் சர்க்கரை அளவை உடலில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

மேலும் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்கள் தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு அவசியம். துரித உணவுகளை கட்டாயம் தவிர்த்து, நார்சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். காய்கறி, கீரை வகைகளை தினமும் எடுக்க வேண்டும்.