நீரிழிவு பாதிப்பு... உணவிலும், உடற்பயிற்சியிலும் தேவை கவனம்!

இந்தியாவில் 13 கோடி பேர், முன் நீரிழிவு நிலையில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

இவர்கள் வாழ்வியல் முறையை மாற்றாவிட்டால், எப்போது வேண்டுமானால், நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாவர்.

புராசசிங் செய்யப்பட்ட உணவு, சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்படாத கார்போ ஹைட்ரேட் உணவு தவிர்ப்பது அவசியம். நார்ச்சத்து மிகுந்த, புரோட்டீன் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.

தினசரி 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். எளிய நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வது அவசியம்.

மன அழுத்தத்தின் போது சுரக்கும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள், உடலில் சர்க்கரை அளவை நேரடியாக அதிகரிக்கின்றன. எனவே, மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், போதை மருந்து பழக்கத்திலிருந்து விடுபடுதல் அவசியம்.

இதுதவிர, டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக உட்கொள்வது, மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பது போன்றவற்றில் கவனம் வேண்டும்.