ஹண்டா வைரஸ் அறிகுறிகள் அறிவோமா...

அண்மையில் அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள உல்லாச கப்பலில் 'ஹண்டா' வைரஸ் தாக்கியதில் மூன்று பயணியர் பலியாகி உள்ளனர். ஹண்டா வைரஸ் குறித்து பார்ப்போம்.

ஹண்டா வைரஸ் என்பது எலி மற்றும் பிற கொறித்துண்ணிகளால் பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும்.

பாதிக்கப்பட்ட எலி, கொறித்துண்ணிகளின் சிறுநீர், எச்சில் அல்லது மலம் கலந்த காற்றை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு பரவும்.

சோர்வு, தலைவலி, காய்ச்சல், தசை வலி மற்றும் இருமல் போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

பாதிப்பு முற்றும் நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் இது உயிருக்கு ஆபத்தான நிலையை உண்டாக்கும்.

இதற்கு இதுவரை குறிப்பிட்ட தடுப்பு மருந்தோ, மருந்துகள் மூலம் முழுமையான சிகிச்சையோ இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பகால மருத்துவ கவனிப்பு மட்டும் மூலம் உயிர் பிழைக்க சிகிச்சை வழங்கப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கையாக எலிகள் இருக்கும் இடங்களைத் தவிர்ப்பது, வீட்டைச் சுத்தமாக வைப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவது முக்கியமாகும்.

உணவுப் பொருட்களை எலிகள் அணுகாதவாறு பாதுகாப்பாக வைக்கவும். எலி கடித்தால் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.