மனித உணர்வுகளை அறியும் நாய்... ஆய்வில் தகவல்!

மனித உணர்வுகளை நாய் அறிவது குறித்து, ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலை ஆய்வு மேற்கொண்டது.

அதில், மனிதர்களின் முகத்தில் வெளிப்படும் பயம், சோகம், உள்ளிட்ட உணர்வுகளை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் திறன் நாய்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெவ்வேறு உணர்வுகளை கொண்ட அறிமுகம் இல்லாத மனிதர்களின் புகைப்படங்களை, 12 வளர்ப்பு நாய்களிடம் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, அதன் மூளையை ஆய்வு செய்ததில் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிலும் சோகம், கோபமான முகங்களை பார்ப்பதற்கும், பயம் கலந்த முகங்களை பார்ப்பதற்கும் இடையே, வெவ்வேறு வித செயல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்தாய்வில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் மட்டுமே ஆய்வு வேற்கொள்ளப்பட்டது.

தெருக்களில் வாழும் மற்றும் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்கள் வித்தியாசமான சூழலில் வாழ்வதால், அவை மனிதர்களின் சைகைகளை வித்தியாசமாக புரிந்துகொள்ளும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.